tamilnadu

img

கிராம மக்களை கவர்ந்த இளைஞர்களின் திருவள்ளுவர் நாடகம்

 

 கீரமங்கலம், ஜன.19- பாலகிருஷ்ணபுரத்தில் பொங்கல் கலை நிகழ்ச்சிகளில் இளைஞர்களால் திருவள்ளுவர் நாடகம் அரங்கேற்றப் பட்டது கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது. தை திருநாளை அறுவடைத் திரு விழா, உழவர் திருநாள் என்று தமிழ்நாடு மட்டுமின்றி தமிழர்கள் வாழும் வெளிநாடு களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல கிராமங்களிலும் மூன்று நாட்கள் தொடர்ந்து விழாக் கோலம் பூண்டி ருந்தது. விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீர மங்கலம் சுற்றியுள்ள பல கிராமங்களில் வழுக்குமரம் ஏறும் போட்டிகள் நடத்தப் படுகிறது. பல மேலும் பல கிராமங்களில் மூன்று நாட்களைத் கடந்தும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல கீரமங்கலம் அருகில் உள்ள பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் வழக்கம் போல பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.     ஆனால் கடந்த சில மாதங்களாக திருவள்ளுவர் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் முதல் முறையாக கிராம இளைஞர்கள், மாண வர்களால் திருவள்ளுவர் நாடகம் அரங் கேற்றப்பட்டது.  அதில் மாணவர்களின் பல கேள்வி களுக்கு திருக்குறள் மூலமே விளக்கங் களும் அளிக்கப்பட்டது. அதாவது குழந்தை கெட்ட வார்த்தை பேசுகிறான் என்று ஒருவர் சொல்ல.. அதற்கு ஒரு திருக்குறளை சொல்லி சிறுவன் பேசு வது கெட்ட வார்த்தை அல்ல “கேட்ட வார்த்தை”யை தான் பேசுகிறான் என்று விளக்கம் சொல்வது அனைவரையும் யோசிக்க வைத்தது. அதாவது பெரிய வர்கள் பேசும் வார்த்தைகளை தான் குழந்தைகள் திருப்பி சொல்கிறார்கள். அதனால் குழந்தைகள் இருக்கும் இடங்க ளில் சரியான வார்த்தைகளை பயன் படுத்த வேண்டும் என்பதை உணர வைத் தது. இந்த திருவள்ளுவர் நாடகம் கிராம மக்களை கவர்ந்திருந்தது.

;