tamilnadu

புதுகையில் வாகன நெரிசலால் பொதுமக்கள் அவதி போக்குவரத்தை முறைப்படுத்த சிபிஎம் கோரிக்கை

புதுக்கோட்டை, ஆக.23- பொதுப் போக்குவரத்து இல்லாமல் தனிநபர் வாக னங்கள் அதிகரிப்பால் சாலை களில் மக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். போக்கு வரத்தை முறைப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக்கூட்டம் ஜூம்  நேரலை மூலமாக சனிக்கி ழமை நடைபெற்றது. கூட்ட த்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் தலை மை வகித்தார். மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார்.  கூட்டத்தில் நிறைவே ற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாவட்ட செயலா ளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஊரடங்கை முன்னிட்டு பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாததால் பொ துமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குகூட அருகில் உள்ள முக்கிய ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள் இல்லாத ஏழைகள் சொ ல்லொண்ணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் பெட்ரோல் விலை உயர்வால் தங்களது வாகனங்களை இயக்க முடியாமல் சிர மப்படுகின்றனர்.

 புதுக்கோட்டை மாவ ட்டத்தின் பொரும்பாலான இடங்களில் கொரோனா பரி சோதனைக்கு இலவச ஆம்பு லன்ஸ் சேவை கிடைப்ப தில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக செலவு செய்து வாடகைக்கு வாக னங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தடையின்றி 108 இல வச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா வார்டுகளில் முறையான குடி நீர்வசதி, கழிப்பிட வசதி,  தரமான உணவு கிடைப்பதை  மாவட்ட நிர்வாகம் உறு திப்படுத்த வேண்டும். சாலை ஓரங்களில் காய்கறி உள்ளிட்ட பொரு ட்களை வைத்து பிழைப்பு  நடத்தும் சிறு, சிறு வியா பாரிகளின் மீது வழக்குப்  போட்டு நீதிமன்றத்தின் மூலம் ரூ.1500 வரை அபராதம் விதி க்கப்படுகிறது. ஏழை மக்க ளின் மீது இரக்கமற்று விதி க்கப்படும் இத்தண்ட னையை ரத்து செய்ய தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஊரடங்கு கால த்தில் சிறு, சிறு காரணங்க ளுக்காக பொதுமக்கள் மீது  போடப்பட்ட பல்வேறு வழ க்குகளை ரத்து செய்ய வேண்டும்.  உயிரைப் பணயம் வைத்து பணி செய்யும்  உள்ளாட்சி தொழிலாளர்க ளின் சம்பளப் பிரச்சனை களை தமிழக அரசும் மாவ ட்ட நிர்வாகமும் தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த அறி க்கையில் கூறப்பட்டுள்ளது.

;