அறந்தாங்கி, ஆக.5- புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிரா மத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. அறந் தாங்கி கோட்டாட்சியர் குணசேகர், கோட்டைப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன், ஆவுடை யார்கோவில் வட்டாட்சியர் ஜமுனா, கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள், தீயணைப்புத் துறையினர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆபத்தான நேரத்தில் மீட்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு ஒத்திகை செய்து காட்டினர்.