tamilnadu

ஓய்வூதியம் வழங்க ஓவியர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 25- தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் ஆலங்குடி கிளைப் பேரவைக்கூட்டம் வியாழக்கிழமை ஆலங்கு டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். பேரவையை வாழ்த்தி தமுஎகச மாவட்டச் செயலாளர் சு.மதியழகன், கிராம நிர்வாக அலு வலகர் கருப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேர வையில் மாவட்டப் பிரதிநிதியாக சேரன், கவுரத் தலை வராக சாமி, தலைவராக எஸ்.முருகேசன், செயலா ளராக அன்பு, பொருளாராக கருப்பையா, துணைத்  தலைவர்களாக எஸ்.ஏ.கருப்பையா, ராஜா, பாலு, துணைச் செயலாளராக கண்ணன், தரணி, மலைமண்ணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனு மதிக்கப்படும் ஓவியர்களுக்கான ஒப்பந்தப் பணி களை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ர்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்க  வேண்டும். ஓவியர்கள் அனைவரையும் நலவாரி யத்தில் இணைத்து வாரியப் பயன்கள் கிடைக்க செய்ய  வேண்டும். வயதான ஓவியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.