tamilnadu

img

பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்க! சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, மே 20- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 13 வயது பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடி யாக கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் வித்யா(13). எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர் கடந்த திங்கள்கிழமை காலையில் அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாத தைத் தொடர்ந்து உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சிறுமி உயி ருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

 சிறுமியை மீட்டு தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தும் சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார். சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலி யுறுத்தி உறவினர்கள் சிபிஎம், மாதர் சங்கத்தினர் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முன்பாக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்த னர்.  இதனைத் தொடர்ந்தே உறவினர்கள் உடலைப் பெற்று அடக்கம் செய்தனர். ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகி யும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.  

இந்நிலையில், புதன்கிழமை யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஒன்றி யச் செயலாளர் வி.ரெத்தினவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் பி.வீராச்சாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் இறந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரி வித்தனர்.

இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல் நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.  மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து உள்ளது என்பதற்கு இதுவொரு உதாரணம். அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்ட பிறகு சாலை விபத்து, கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சி யாளர்களால் இத்தகைய அவ லங்கள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. 13 வயது பள்ளி மாணவியின் மரணம் மிகுந்த வேதனைக்குரியது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

;