tamilnadu

img

குரு பெயர்ச்சியும் அறிவியல் பார்வையும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை, அக்.24- தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் சார்பில் ‘குரு பெயர்ச்சி யும் அறிவியல் பார்வையும்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வுக் கருத் தரங்கம் புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.  குரு பெயர்ச்சியையொட்டி பல்வேறு அறிவியலுக்கு எதிரான செயல்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது. இதையொட்டி அறி வியல் பூர்வ குரு(வியாழன்) இடப் பெயர்ச்சியை விளக்கும் விதமாக ‘குரு பெயர்ச்சியும் அறிவியல் பார் வையும்’ என்ற தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. கருத்தரங்க ளில் கலந்துகொண்டு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் ஆர்.விவேகானந்தன் உரையாற்றினார்.அவர் பேசும்போது: பெரு வெடிப்பு, பிரபஞ்ச, நட்சத் திர மண்டலங்கள் தோற்றம், சுழற்சி, அவற்றிற்கு இடையேயான தொலைவு, இடப்பெயர்ச்சி உள்ளிட்ட அறிவியல் பூர்வமான நிகழ்வுகளை ஆதாரங்களோடு விளக்கிப் பேசினார். மேலும், பால்வழித் தோற்றம், சூரிய மண் டலங்களின் இயக்கம்,  கோள்க ளின் சுழற்சி, இடமாற்றம், கால அளவுகள் போன்றவையும் ஒரு அறிவியல் நிகழ்வே என்றும், இதை வெகுமக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டுமென்றும் விளக்கினார். கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் கே.சதாசிவம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் அ.மண வாளன், மாவட்ட துணைத் தலை வர் எம்.வீரமுத்து, இணைச் செய லாளர் மா.சிவானந்தம், துளிர் திற னறிதல் தேர்வு ஒருங்கிணைப்பா ளர் கெ.ஜெயபாலன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்க, இணைச் செயலாளர் டி.விமலா நன்றி கூறினார்.