tamilnadu

சிபிஎம் போராட்டம் வெற்றி விளைநிலத்தில் புதைத்த சடலம் அப்புறப்படுத்தப்பட்டது

ஆலங்குடி, ஆக.29- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நம்பன்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(65). இவருடைய மனைவி சுந்தர ம்பாளுக்கு காத்தான்விடுதியில் விளைநிலம் உள்ளது. இந்நிலையில், காத்தான்விடுதியை சேர்ந்த பிச்சை என்பவர் கடந்த 8-ஆம் தேதி இறந்துவிட்டார். இவரது சடலத்தை பிச்சை மகன் பழனிமுத்து அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதைப்பதற்காக எடுத்துச் சென்றனர். சடலத்தை காத்தான்விடுதியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த சுடுகாட்டில் புதை க்காமல் அருகில் உள்ள சுந்தர ம்பாளுக்குச் சொந்தமான விளைநிலத்தில் கடந்த 9-ம் தேதி பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு புதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ரெங்கசாமி மகன் அர்ச்சுணன் விளைநிலத்தில் சடலத்தை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிc த்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பழனிமுத்து மற்றும் சுமார் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அர்ச்சுணனை தாக்கியுள்ளனர். இதில் அர்ச்சுணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அர்ச்சுணனை மீட்டு, புது க்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மரு த்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  சிபிஎம் போராட்டம் இதனைத்தொடர்ந்து, அர்ச்சுணனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், விளைநிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை அகற்ற கோரி ஆலங்குடி காவல்நிலையம் மற்றும் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நம்பன்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் கடந்த 19-ம் தேதி ஆலங்குடி–ஆதனக்கோட்டை சாலையில் பேருந்து மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் வில்லியம் மோசஸ் விளைநிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை அகற்றுவதாக உறுதியளித்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விளைநிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை அகற்றுவதற்காக வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் மற்றும் வருவாய்த்துறையினர் வந்தனர். இதனையறிந்த நம்பன்பட்டி மற்றும் காத்தான்விடுதியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால், காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசாரின் பலத்த பாதுகாப்புடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தரமூர்த்தி, சக்திவேல், மதியழகன் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையில் வருவாய்த்துறையினர் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து காத்தான்விடுதி சுடுகாட்டில் புதைத்தனர். 

;