அறந்தாங்கி, ஜூலை 1- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலை எல்.என். புரம் சின்ன அண்ணாநகர் பகுதியில் தந்தை பெரியார், சேகுவேரா சிஐடியு ஆட்டோ ஒட்டுநர்கள், உரி மையாளர்கள் சங்கம் துவக்க விழா புத னன்று நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ சங்க கிளைத் தலை வராக எம்.ஈப்பன்ராஜா, செயலாளராக ஆர். கல்யாணம், பொருளாளராக ஆர்.ஆனந்த், துணைத் தலைவராக பாரதிதாசன், கௌ ரவ தலைவராக சரவணமுத்து, ஒருங்கி ணைப்பாளர்களாக தங்கராஜ், சண்முகநா தன், சக்தி மற்றும் சட்ட ஆலோசகர்களாக வழ க்கறிஞர்கள் கோ.கண்ணன், கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர். சிஐடியு கொ டியை மாவட்டத் தலைவர் முகம்மது அலி ஜின்னா ஏற்றி வைத்தார். சங்க பெயர் பல கையை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் திறந்து வைத்தார்.