புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புத்தகத் விழாவில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவியர் புத்தகங்களை வாங்கி சிறப்பித்தார்கள். இதில் அதிக புத்தகங்களை (சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு) வாங்கி பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். இப்பள்ளியை பாராட்டி பள்ளியின் துணை முதல்வர் இரா.பிரின்ஸிடம் முதல் பரிசை திரைப்பட இயக்குனர் ஆர்.பாண்டியராஜ் வழங்கினார்.