tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படுமா? : பி.ஆர்.நடராஜன் கேள்வி

புதுதில்லி, பிப். 5- குறைந்தபட்ச ஓய்வூதியம் சம்பந்தமாக திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவரும் கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பி்.ஆர்.நட ராஜன்  பேசுகையில்,  தொழிலாளர் மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட, உயர் அதிகார கண்காணிப்பு கமிட்டி பரிந்துரை செய்தபடி குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்த அரசு ஏதாவது முடிவு எடுத்துள்ளதா?  அப்படியெனில், ஓய்வூதிய நிதி யத்திலிருந்து இதற்கென எதிர் பார்க்கப்படும் வெளியேற்ற தொகை யின் விபரம், மற்றும் இபிஎஸ் - 1995க்கான பட்ஜெட் ஆதரவு ஒதுக்கீடு விபரம், நிதி ஒதுக்கீட்டு முறையின் விபரம் என்ன, இதனால் பயனடையும் ஓய்வூதியதாரர்கள் எண்ணிக்கை மற்றும் இதில் சம்பந்தப்பட்டுள்ள தொகை யின் விபரங்கள் குறித்து தெரியப்படுத்து மாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் ஸ்ரீ சந்தோஷ் குமார் கங்வார் பதிலளிக்கை யில், அமைச்சகத்தின் உயர் அதிகார கண்காணிப்பு கமிட்டி பரிந்துரைத்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1000 லிருந்து  ரூ.2000 ஆக உயர்த்துவதற்கான விஷயத்தில், எந்த ஒரு இறுதி முடிவும் அரசால் எடுக்கப்படவில்லை. ஓய்வூதியம் மாதம் ஒன்றி ற்கு ரூ.2000 ஆக உயர்த்தப்படுமேயானால் இயல்பான கணக்கீட்டின் படி, ஓய்வூதிய நிதியத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் மொத்த வெளியேற்ற தொகை  2020-2021 ஆம் ஆண்டில் ரூ.5955 கோடியாக இருக்கும். அதேநேரம், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000 லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டால்  சுமார் 39.72 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றார்.

;