சிவகங்கை, ஜூலை 17- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா நெஞ்சத்தூர் ஊராட்சி கண்டனி கிராமமக்கசள் பொதுமயானத்திற்கு பாதை கேட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்தினர். நெஞ்சத்தூர் ஊராட்சி கண்டனி கிராமத்தில் அனைத்து சாதியினருக்கான பொதுமயானம் உள்ளது. இந்த மயா னத்திற்கு பாதை இல்லாததால் வயல் வரப்புகளே பாதையாக பயன்படுத்தப் பட்டுவருகிறது. இதனால் பல்வேறு பிரச்ச னைகள் எழுகின்றன. இப்பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் தீர்க்கவில்லை. இந்த நிலையில் கண்டனி மக்கள் மயானத்திற்கு பாதை கேட்டு நெஞ்சத்தூர் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சேவு கன் உள்ளிட்ட கிராம மக்கள் இளையான் குடி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளையான் குடி வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 தினங்களில் பாதை அமைத்துத்தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்