திருச்சிராப்பள்ளி, ஆக.25- பாதுகாப்பு படைக்கலன் தொழிற் சாலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கை கண் டித்து நாடு முழுவதும் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலை ஊழி யர்கள் கடந்த 20-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வரை ஒரு மாத கால வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் தொழிற்சங்க சம்மேளன தலைவர்கள் கடந்த 23-ம் தேதி பாதுகாப்புத் துறை செயலாள ருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மத்திய அரசு கார்ப்பரேசன் சம்பந்த மாக இறுதி முடிவு எதுவும் எடுக்க வில்லை என்று உறுதி அளித்ததை தொடர்ந்து வேலை நிறுத்தம் தற் காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள் ளதாக தொழிற்சங்க சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 26-ம் தேதி காலை முதல் பணிக்கு செல்ல பாது காப்பு படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்ஏபிபி ஊழி யர்களும் திங்கட்கிழமை முதல் வேலைக்கு செல்வார்கள். மத்திய அரசு உறுதிமொழியை மீறும் பட்சத் தில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.