tamilnadu

img

பெரியார் விருது அறிவிப்பு

 சென்னை,ஜன.16- பெரியார் விருது குறித்து திமுக தலைவர் மு.க.  ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், செஞ்சி ராமச்சந்திரனுக்கு 2019ஆம் ஆண்டுக்கான பெரியார்  விருதை தமிழக அரசு அறிவித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர்  பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்,“தமிழ் வளர்ச்சித்  துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை  பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்பட வில்லை. கடந்த ஆண்டு, சொந்தக் கட்சியைச் சேர்ந்த வருக்கு வழங்கியதைப் போல் இந்தாண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது தில்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனுக்கு 2019ஆம் ஆண்டுக்கான பெரியார்  விருதை தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது செஞ்சி  ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது. பெரியார் விருதுடன் ரூ. 1. லட்சம் ரொக்கமும், 1 சவரன் தங்கப்  பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.

;