tamilnadu

img

பன்னீர் செல்வமும் வெளிநாடு செல்கிறார்?

சென்னை, செப். 13 - முதலீடுகளை ‘கவருவதற்காக’ கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பின் கடந்த 10ஆம் தேதி தமிழகம் திரும்பினார். பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த அவர், ‘8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருக்கிறோம்’ எனத் தெரிவித்தார். இந்த நிலையில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார். சிங்கப்பூர், சீனா அல்லது இந்தோனிஷியா ஆகிய நாடுகளுக்கு அவர் செல்ல இருப்ப தாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் வசம் தற்போது வீட்டுவசதி, சிஎம்டிஏ உள்ளிட்ட துறைகள் உள்ளன. 

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகை யில், ‘சிங்கப்பூர் செல்லும் துணை முதல்வர் கட்டுமானத் துறை கண்காட்சியினை பார் வையிடவுள்ளார். அதன்பின்னர் சீனா  சென்று குறைந்த செலவில் வீடுகட்டுவது தொடர்பாகவும், நகர்ப்புற மேம்பாடு தொடர் பாகவும் பார்வையிடவுள்ளார். அவர் இந்தோனிஷியாவும் செல்லலாம்’ என்று தெரிவித்தனர். துணை முதல்வர் எப்போது செல்கிறார் என்பதற்கான தேதிகள் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.