tamilnadu

img

காவல்துறை தலைவராக ஜெ.கே.திரிபாதி நாளை பதவியேற்பு

சென்னை,ஜூன் 29- தமிழக காவல்துறையின் தலைவராக (டிஜிபியாக) ஜெ.கே.திரிபாதி நியமிக்கப் பட்டுள்ளார். தமிழகத்தின் தற்போ தைய சட்டம்-ஒழுங்கு டிஜிபி யாக உள்ள டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலம் இம் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடை கிறது. புதிய  டிஜிபி ஆக நியமிக்கப்படப்போவது யார் என கேள்வி எழுந்த நிலையில், அதற்கான நியமன விதிகளின்படி, மத்திய பணியாளர் தேர்வா ணையத்திற்கு, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு  அனுப்பியுள்ளது. மத்திய  பணியாளர் தேர்வாணை யத்தின் சம்மந்தப்பட்ட குழு கூடி, அதில் சிலரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. இந்த பட்டியலை கவ னமாகவும், சுதந்திரமாகவும் சீர்தூக்கி பார்த்து, ஜே.கே.திரிபாதியை, தமிழக காவல்துறை தலைவர் பொறுப்பில் டிஜிபியாக நியமித்திருப்பதாக தமிழக அரசின் உள்துறை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடை பணியாளர் தேர்  வாணைய டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி,  சட்டம்-ஒழுங்கு பிரிவு  டிஜிபியாக நியமிக்கப் பட்டுள்ளார். ஜூலை 1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்ளும் ஜே.கே.திரி பாதி 2 ஆண்டுகளுக்கு அப்பதவியை வகிப்பார். தமிழக காவல் துறையில் பல பிரிவுகளில் டிஜிபி அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், சட்  டம்-ஒழுங்கு டிஜிபி பதவி தான் காவல்துறை தலைவர்  பதவி என்பது குறிப்பிடத் தக்கது. 2001-ல் காவல் துறையில் சிறந்த நிர்வாகத்திற்காக ஸ்காட்லாந்து நாட்டில் இவ ருக்கு தங்கப் பதக்கம் வழங் கப்பட்டது. மேலும், 108 நாடு கள் பங்கேற்புடன் நடந்த சர்வதேச காவல் துறை மாநாட்டில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. மெச்சத் தகுந்த பணிக்காக 2002-ல் இந்திய குடியரசு தலைவர் விருதையும், சிறந்த நிர்வா கத்திற்காக 2008-ல் பிரதம மந்திரி விருதையும் பெற்றுள் ளார். சட்டம்  ஒழுங்கு பிரிவில் நீண்டகாலம் அனுபவம் உள்ள அதிகாரியான ஜே.கே. திரிபாதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழக டிஜிபியாக நீடிப்பார்.

;