tamilnadu

img

பின்தங்கிய பிரிவினர் சான்று பெற வழிகாட்டி விதிகள்

சென்னை, ஆக.3- பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெறுவதற்கான வழிகாட்டி விதிகள்  வெளியிடப்பட்டுள்ளன.  வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள  கடிதத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் சான்றிதழைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது நபரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குக் கீழ் இருக்க வேண்டும். அதே சமயம், 5 ஏக்கர் விவ சாய நிலம் அல்லது அதற்கு அதிகமாக இருந்  தாலோ, ஆயிரம் சதுர அடிக்கு அதிகமாக அடுக்குமாடியில் வீடு சொந்தமாக வைத்தி ருந்தாலோ சான்றிதழ் பெற முடியாது. இந்தச் சான்றிதழை பெற விரும்பும் மாணவர் அல்லது மாணவியின் வயது 18-க்கு  குறைவாக இருக்க வேண்டும். இந்தச் சான்றி தழைப் பெற நினைக்கும் குடும்பத்தினர் கிரா மத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தால் அவர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.