tamilnadu

img

5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவியல் பூர்வமற்றது ஆசிரியர் சங்கம்

சென்னை.செப், 20- 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அமைப்பின் சார்பில் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், பொதுச்செயலாளர் பி.மனோகரன், மாநிலப் பொருளாளர் சி.சிவக்குமார் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு: இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்ட திருத்தங்களின் படி 5, 8 வகுப்பு களுக்கு நடப்பு ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமி ழக அரசு அறிவித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கி றது. இத்திட்டம் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமையைத் தட்டிப்பறிப்பதாக அமைந்துவிடும். மேலும் மாணவர்கள் இடைநிற்றலை அதிகரிக்கும். மலை வாழ்  மற்றும் கடலோர குழந்தைகளே அதிகம் தொழிலாளர்களாக மாறும் சூழல் உருவாகும். குழந்தைகளின் நலன் கருதி கல்வி உரிமைச் சட்டம்  இயற்றப்பட்டது. அதில் சட்டத் திருத்தம் செய்து 5 மற்றும் 7 வகுப்பு களுக்கு வழக்கமான தேர்வு நடத்த மத்திய அரசு கூறுகிறது. பிரிவு  30 எந்தக் குழந்தையும் 8 ஆம் வகுப்பு முடியும் வரை வாரியத் தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறது.  வாரியத் தேர்விற்கும் வழக்கமான தேர்விற்கும் உள்ள வேறுபாட்டை  தமிழக அரசு முதலில் தெளிவுப்படுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் பொதுத் தேர்வு நடத்தவும் தேர்வுக் கட்டணத்தை நிர்ண யிக்கவும், அதற்கான குழு அமைக்கவும் அரசு அரசாணை வெளி யிட்டிருப்பது நியாயமற்றது.

மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கை அனைத்து தரப்பின ராலும் மிகக்கடுமையான விமர்சனத்திற்குள்ளான அம்சங்களில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என்பதும் ஒன்று, இந்த நிலையில் மத்திய அரசைவும் முந்திக் கொண்டு தமிழக அரசு அதை அமல்படுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு தேர்வு என்பது மாணவர் நலன்  சார்ந்தது அல்ல. உளவியல் மற்றும் சமூக உளவியல் தாக்கங்களினால் மாணவர் கல்வியின் மீது ஆர்வமிழப்பது, பள்ளியிலிருந்து விலகுவது  அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் குறிப்பாக பெண் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள்.  ஆகவே, அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்று அறிவித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கேட்டுககொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;