மத்திய அரசு: ஜம்மு -காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு 98 சதவிகித மாணவர்கள் வருகை.
ச.சா- பொய் சொல்றதுனு முடிவாயிடுச்சே.. அப்புறம் எதுக்கு 2 சதவிகிதத்த விட்டுட்டீங்க..!!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அமெரிக்கப் பயணம் வெற்றி பெற்றுள்ளது.
ச.சா- முதல்வர விட அதிகமாக விருது வாங்குனதச் சொல்றாரோ..??
வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார்: விதைப்பந்து வீசி மரம் வளர்க்க முடியாது.
ச.சா- பல பேரு விதைப்பந்து பேருல கல்லா கட்டுறாங்களோ..??
அசாம் பாஜக அமைச்சர் சர்மா: அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன.
ச.சா- உங்க தேசியத் தலைவர் இந்தக் குழப்பங்களத்தான் நாடு முழுக்க கொண்டு வரப் போறாரா..??