சென்னை, ஏப். 11- கொரோனா காரணமாக ஊரடங்கு உள்ள நிலையில் கிரீம்லைன் டெய்ரி புராடக்ட்ஸ் (சிடிபிஎல்) நிறுவனம் வீடுகளுக்கே பால் பொருட்களை விநியோகம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள மக்கள் நேரடியாகப் பால், நெய், தயிர், பனீர், மோர், மில்க்ஷேக், சுவையூட்டப்பட்ட பால், பால்கோவா போன்ற பால் பொருட்களை ஆர்டர் செய்யலாம். இவை ஜெர்சி தயாரிப்புகளாகக் கிடைக்கும். இதன் மூலமாக, வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறே பால் பொருட்களைப் பெற முடியும். கோவிட்-19 வைரஸ் பாதிப்பின் இடையே அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிடிபிஎல் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, விஜயவாடா நகரங்களில் இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.