tamilnadu

img

அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

சிதம்பரம்,நவ.30- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தின் 83-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமையன்று காலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது.  பட்டமளிப்பு விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரி லால் புரோகித் 57,407 மாணவ- மாணவி களுக்கு பட்டங்களை வழங்கினார்.  37 பேருக்கு தங்கப்பதக்கம், 96 பேருக்கு பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கி பேசினார். பல்கலைகழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் சிறப்புரையாற்றினார். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சத்ய நாராயணமூர்த்தி பட்ட மளிப்பு விழா உரையாற்றினார். பல்கலைக் கழக துணைவேந்தர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

;