tamilnadu

img

ஊராட்சி பட்டியலின பெண் தலைவர் அமிர்தம் தேசிய கொடி ஏற்றினார்

சிபிஎம், தீஒமுன்னணி முயற்சி வெற்றி

திருவள்ளூர், ஆக. 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் களப்பணி யால் வியாழனன்று (ஆக.20) பட்டியலின பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் தேசிய கொடியேற்றினார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்துப்பாக்கம் ஊராட்சி தலைவராக பட்டியல் வகுப்பை சேர்ந்த அமிர்தம் உள்ளார். சாதி ஆதிக்க சக்திகள் அவரை சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கள ஆய்வு  மேற்கொண்ட தில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுதொடர்பாக தீக்கதிர் நாளிதழில் ஆக.17அன்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது. இந்த சாதிய வன்மம் குறித்து ஆக.18 அன்று செய்தி சேகரிக்கச் சென்ற புதியதலை முறை தொலைக்காட்சி செய்தியாளர் சாதிய ஆதிக்க சக்திகளால் தாக்கப்பட்டார். இதுகுறித்தெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணையோடு ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டா ட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார். இதனிடையே இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணை யம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ் வரி ரவிக்குமார், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டேர் முன்னிலையில் வியாழனன்று (ஆக.20) அன்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பஞ்சாயத்து தலை வர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின் அமிர்தத்தை அழைத்து சென்று ஊராட்சி மன்ற தலைவர் நாற்காலியில் ஆட்சியர் அமரவைத்தார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய ஊராட்சி தலைவர் அமிர்தம், தேசிய கொடியை ஏற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் ஆய்வு

அதன்பின் செய்தியார்களிடம் பேசிய ஆட்சியர், ஊராட்சி தலைவர் ஜனநாயக கடமையாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புகார் எதுவும் வரவில்லை. இருப்பினும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம்  மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவ்வாறு எங்காவது இருந்தால் அதனை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செயலர் தற்காலிக நீக்கம்

இந்த அசாதாரண நிலைக்கு காரண மாக இருந்த ஊராட்சி செயலாளர் சசிக்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பே தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஊராட்சி  செயலாளர் நியமிக்கப்பட்டு தலைவருடன் இணைந்து செயலாற்றவும், அதனை வட்டார  வளர்ச்சி அலுவலர் நேரிடையாக கண் காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நேமலூர் ஊராட்சி அருந்ததியர் பெண்  தலைவரை தேசிய கொடி ஏற்ற விடாமல் அவமதித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது வரை புகார் ஏதும் வரவில்லை. வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறினார்.


 

;