tamilnadu

img

நாடு முழுவதும் 3.50 லட்சம் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை,ஜூலை 31- மருத்துவக் கல்வியை முற்றாக சீரழித்து முழு முழுக்க வியாபார மயமாக்கும் விதத்தில் உள்ள தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தும் இதனை கொண்டு வந்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் 3.50 லட்சம் மருத்துவர்கள் புதனன்று வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலும் மருத்து வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் 24 மணி நேரம் அவசர  சிகிச்சை பிரிவு நீங்கலாக பிற பிரிவில்  பணியாற்றும் மருத்துவர்கள்  பணியை புறக்கணிக்குமாறு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இந்திய மருத்துவ சங்கத்தில் தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் மருத்துவர்கள்  உட்பட நாடு முழுவதும் 3.50 லட்சம் மருத்துவர்கள்  உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நம்நாட்டில் மருத்துவ சேவையை கண்காணிக்கும் அமைப்பாக   ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில், அடிப்படையில் கூட்டாட்சித் தத்துவத்தின்படியும் ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. மருத்துவர்கள் தங்களுக்குள்ளேயே தேர்வு செய்கிற உயர் அமைப்புகளாக இருக்கிறது. ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தில்  ஆறு மாநிலங்களி னுடைய பிரதிநிதிகள் மட்டும்தான் ஏக  காலத்திலே இருப்பார்கள். ஏறக்குறைய 23 மாநிலங்களினுடைய பிரதிநிதிகள் எப்போதும் இந்த உயர் கமிட்டிகளில் இருக்க முடியாது என்ற நிலை உள்ளது.  

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கத்தினர்  நாடு முழுவதும் புதனன்று காலை 6 மணி முதல் வியாழனன்று காலை 6 மணி வரை பணிகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இதன்படி நாடு முழுவதும் 3.50 லட்சம் மருத்துவர்கள்  போராட்டத்தில் பங்கேற்றனர்.  தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சியினர், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்த்தனர். எதிர்க்கட்சியினர் அளித்த அனைத்து திருத்தங்களும் பாஜக அரசால் நிராகரிக்கப்பட்டன.  போராட்டம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலச் செயலா ளர் கனகசபாபதி கூறுகையில், இந்திய மருத்துவக் கவுன்சிலில் டாக்டர்கள் மட்டுமே உறுப்பினராக முடியும். ஆனால் மத்திய அரசு கொண்டு வர  திட்டமிட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில் 50 சதவீதத்திற்கு மேலாக டாக்டர்கள் அல்லாத பணி யாளர்களை உறுப்பினராக்க திட்டமிட்டுள் ளனர். இதைப் போல் பிரிட்ஜ்கோர்ஸ்  படித்தவர்கள் அனைவரும் நோயாளி களுக்கு மாத்திரைகளை பரிந்துரைக்க லாம் என்ற விதியை எங்கள் எதிர்ப்பால் மத்திய அரசு நீக்கியது. தற்போது தேசிய மருத்துவ ஆணைய விதி எண்  32 மூலம் காய்ச்சல் உட்பட பிற வியாதி களுக்கு  டாக்டர்கள் அல்லாமல் பயிற்சி பெற்ற நபர்கள் மருந்து, மாத்திரை களை பரிந்துரைக்கலாம் என்று கூறி யுள்ளது. இது மருத்துவ விதிகளுக்கு எதிரானது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்து விட்டு மத்திய அரசின் கீழ்  செயல்படும் அமைப்பாக தேசிய மரு த்துவ ஆணையத்தை உருவாக்கவுள்ள னர் என்று தெரிவித்தார்.

;