tamilnadu

img

மோடி அரசும் பங்குச் சந்தையும் புள்ளி விவரங்கள் தரும் உண்மைகள்

                                                                                                     பங்குச் சந்தை நிaலவரம் 1991-2019

    பிரதமர்                       கட்சி                       ஆட்சி துவங்கிய நாள்/                                         ஆட்சி முடியும் நாள்/                      (compaunded   annual growth rate)   கூட்டு வருடாந்திர 

                                                                               பங்கு சந்தை நிலவரம்                                        பங்கு சந்தை நிலவரம்                   வளர்ச்சி விகிதம் ( compaunded   annual growth rate)

பி.வி.நரசிம்மராவ்    காங்கிரஸ்              21/ஜூன்/1001    1337                                                        16 மே,1996    3823                                                                        23.90%

ஏ.பி.வாஜ்பாய்         பாரதிய ஜனதா        16/மே/1006         3823                                                     1/ஜூன்/1996   3725                                                                      -44.70%

எச்.டி.தேவகவுடா      ஜனதா                        1/ஜூன்/1996    3725                                                      21/ஏப்ரல்/97    3800                                                                        2.30%

ஐ.கே.குஜரால்             ஜனதா                       21/ஏப்ரல்/1997    3800                                                    19/மார்ச்/98    3821                                                                          0.60%

ஏ.பி.வாஜ்பாய்    பாரதிய ஜனதா             19/மார்ச்/1998    3821                                                  10/அக்டோபர்/99    4982                                                                18.50%

ஏ.பி.வாஜ்பாய்    பாரதிய ஜனதா       10/அக்டோபர்/1999    4982                                             22/மே/2004    4962                                                                             -0.10%

மன்மோகன் சிங்    காங்கிரஸ்                       22/மே/2004    4962                                                   22/மே/2009    13,887                                                                           22.80% 

மன்மோகன் சிங்    காங்கிரஸ்                       22/மே/2009    13,887                                                26/மே/2014    24,717                                                                           12.20%

மோடி                    பாரதிய ஜனதா                 26/மே/2014    24,717                                                  23/மே/2019    38,811                                                                              9.50% 

                                                                                                                                                                                                                                                                                                                                    source: Bloomberg, data as on May, 23,2019

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பங்கு சந்தை களில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு பல முதலாளித்துவ ஊட கங்கள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு காணப்படுகிறது.  குறிப்பாக நமது நாட்டில் 1990களில் புதிய பொரு ளாதார கொள்கை அமல்படுத்த துவங்கிய காலகட்டத்தில் இருந்து நாட்டில் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள், சர்வதேச பிரச்சனைகள், பருவ மாற்றங்களால் ஏற்படும் மழை, வெள்ளம், வறட்சி மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு காரணிகளாக அமைகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக முதலா ளித்துவ ஏடுகள் மோடி தலைமையிலான அரசு, ‘வளர்ச்சியின் அரசு’  என்ற பெயரில், இந்தியா வளர்ந்து வருவதாகவும், நாடே முன்னேறி வருவது போன்ற மாயத் தோற்றத்தையும் படித்த மற்றும் மத்திய தர வர்க்கத்திடம் ஏற்படுத்தி வருகின்றன.  சென்ற மத்திய மற்றும் மாநில தேர்தல்களில் பாஜக அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இருந்து திரட்டிய மிகப் பெரிய அளவிலான நிதியை கொண்டு மிகப்பெரிய அளவிலான பரப்புரையை மேற்கொண்டும், மிகப் பெரிய அளவிலான விளம்ப ரங்களை கொண்டும் பல முதலாளித்துவ ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்களை மக்கள் மன்றத்தில் கட்டமைத்து வருகிறது. இதுகுறித்து மாநிலங்களவையில் பேசும் போது மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்க ராஜன் அவர்கள், கடந்த தேர்தலில் மட்டும் பாஜக 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்திருப்பதாக ஊடக ஆய்வு மையம் (centre for media studies) வெளியிட்ட விபரத்தை தெரிவித்தார். அதாவது நமது நாட்டின் மொத்த தேர்தல் செலவினத் தொகையில் பாஜக 45 சதவீதம் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார். 

பங்குச்சந்தை பித்தலாட்டம்
இத்தகைய நடைமுறை சூழலில் நமது நாட்டின் பங்கு சந்தை புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது மோடி அரசின் பித்தலாட்டத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேற்கண்ட பங்கு சந்தை புள்ளி விபரங்களை பார்க்கும் போது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த பிர தமர்களில் பாரதிய ஜனதாவின் ஆட்சியில் தான் பங்கு சந்தை களின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. பாரத பிரதமர்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி யில் இருந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பங்கு சந்தைகள் எதிர்மறை வளர்ச்சியை (Negative growth) காட்டியுள்ளது.  நமது நாட்டில் புதிய பொருளாதார கொள்கைக்கு பின் பொறுப்பில் இருந்த எந்த பிரதமரும் வாஜ்பாய் ஆட்சி போன்று எதிர்மறை பங்கு சந்தை வீழ்ச்சியை காட்ட வில்லை.  மறுபுறம் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி காலகட்டத்தில் மிகக்குறுகிய அளவில் (9.50%) பங்கு சந்தைகள் வளர்ச்சியை காட்டியுள்ளது. இது குறுகிய காலம், நமது நாட்டில் பிரதமர் பொறுப்பில் இருந்த தேவகவுடா, குஜரால் போன்றவர்களை காட்டிலும் அதிகம் என்று வேண்டுமானால் பெருமைபட்டுக் கொள்ளலாம்.  நமது நாட்டில் ஐந்து ஆண்டுகள் தொடர் பொறுப்பில் இருந்த பிரதமர்களில் மோடி அரசு மட்டுமே குறைந்த அளவு பங்குச் சந்தை வளர்ச்சியை காட்டியுள்ளது என்பதே புள்ளி விபரங்கள் காட்டும் உண்மை. மறுபுறம் இவையா வும் மூடி மறைக்கப்பட்டு மோடி நமது நாட்டின் வளர்ச்சி நாயகனாகவும், அவரால் தான் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதாகவும் தவறான செய்திகளை முதலாளித்துவ ஏடுகள் தொடர்ச்சியாக பரப்புரை செய்து உண்மையான பொருளா தார நிலையை மறைத்து வருகிறது.  மறுபுறம் சமீப காலத்தில் தேசிய பங்கு சந்தையில் (National stock exchange) சில பங்கு தரகர்கள் தனியாக இயங்கி பல நூறு கோடிகள் லாபம் சம்பாதித்த நிகழ்வும்; இது உண்மை என்று கண்டறியப்பட்டு பங்கு சந்தையின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும், இத்தீர்ப்புக்கு எதிராக நாங்கள் தேசிய பங்கு சந்தையை பட்டியலிட உள்ளதால் (listing of National stock exchange) மேல் முறையீடு செய்ய போவதில்லை என்ற நிதி சார்ந்த அறிவிப்புகளும் இந்திய பங்கு சந்தையின் மேல் இருந்த நம்பகத் தன்மையை முதலீட்டாளர்களிடம் போக்கி விட்டது.  இத்தகைய நடைமுறை சூழலில் பங்குச் சந்தைகளில் முதலீடுகளை செய்துள்ள முதலீட்டாளர்களின் பணம் பல பெரிய நிறுவனங்கள் திவாலாகும் நிலையில், பல தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் வழங்கிய தவறான தர சான்றிதழ்களும் போலியானவை என்று கண்டறியப் பட்டுள்ள சூழலில் மோடி அரசின் எஞ்சிய காலத்தில் பங்கு சந்தைகள் வளர்ச்சி காண்பது அரிது. வேண்டுமானால் உரிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டால் தொடர் வீழ்ச்சிகளை தடுக்கலாம். ஆனால் வளர்ச்சியின் நாயகன் என்ற மோடியின் மோசடி பிம்பம் மக்கள் மன்றத்தில் களையும் நாள் வெகு தொலையில் இல்லை.

ஆதாரம்: ‘அவுட் லுக் மணி’ இதழில் அபராஜிதா குப்தா 
எழுதிய ‘புல்ஸ் அப் தலால் ஸ்ட்ரீட் சார்ஜிடு அப்?’ 
என்ற கட்டுரையின் தகவல்கள்)


 

;