tamilnadu

img

நவம்பர் புரட்சியின் சோசலிசப் பயணம் வெல்லும்! - என்.குணசேகரன்

புரட்சியால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய சமூகமாக சோவியத் சமூகம் விளங்கியது. சோவியத் மக்களின் அயராத உழைப்பால் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீத வளர்ச்சியை சாதிக்க முடிந்தது. இன்றைக்கும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் கூட அந்தச் சாதனை உயரத்தை எட்ட முடியவில்லை.

1917 நவம்பர் 7 லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி எனப்படும் கம்யூ னிஸ்ட் கட்சி புரட்சி வழியாக அரசு அதி காரத்தை கைப்பற்றியது. கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யப் புரட்சி நடந்திருந்தாலும் என்றைக்கும் பொருந்துகிற பல வழிகாட்டு தல்களை அது உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. புரட்சிகர வர்க்க இயக்கங்களுக்கு பல கோட்பாடுகளை ரஷ்யப் புரட்சி வழங்குகிறது.

இன்றும் கூட ரஷ்யப் புரட்சி வரலாற்றை எழுதுகிற முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களும், கட்டுரையாளர்க ளும் அதனைப் பற்றிக் குறிப்பிடுகிற போது, அது ஒரு “ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி” என்று எழுதுகின்றனர். அதாவது ஜார் மன்னனின் ஆட்சி முதலில்  கவிழ்க்கப்பட்டது. அலெக் சாண்டர் கெரென்ஸ்கி ஆட்சியை  கவிழ்த்து லெனின் பலவந்த மாக ஆட்சியைக் கைப்பற்றினார் என்று வரலாற்றாசிரி யர்கள் இளைய தலைமுறைக்கு தொடர்ந்து போதித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்றைய ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ் திறமையற்ற மோசமான ஆலோ சகர்களின் பேச்சைக் கேட்டு ஆட்சி நடத்தியதால் பிப்ரவரி புரட்சி நடந்து கெரன்ஸ்கி ஆட்சிக்கு வந்தார் என்று இன்றும் புரட்சிகர வரலாற்றை திரித்து எழுதி நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  (கடந்த ஆண்டு வெளிவந்த நூல்; ”ரஷ்ய புரட்சி :ஒரு புதிய வரலாறு”: எழுதியவர் சீன் மெக்மீகின்) இந்நிலையில் உழைக்கும் வர்க்கத்திற்கு ரஷ்யப் புரட்சி யின் மகத்துவத்தை உணர்த்தும் பொறுப்பு அதிகரிக்கிறது.

புதிய சமூகத்திற்கான நுழைவு வாயிலாக...

ரஷ்யப் புரட்சி வரலாறு உழைக்கும் மக்களின், தொழிலாளி, விவசாயி வர்க்க கூட்டணி நிகழ்த்திய மாபெரும் அற்புதம் என்பதை மறைக்க இன்றும் இடையறாது முயற்சித்து வருகின்றனர். அன்றைய அதிபர் கெரன்ஸ்கி யின் திறமையின்மையால்தான்  லெனின் ஆட்சிக்கு வர முடிந்திருக்கிறது என்று இன்றும் எழுதுகின்றனர்.  ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்வு சரித்திரத்தில் அவ்வபோது நடக்கிற சம்பவங்கள் போன்றது அல்ல. பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட மனித சமூகம், காலம் காலமாக தன்னை அடிமைப் படுத்தி வந்த சூழலை முற்றாக மாற்றி சமத்துவத்தை நோக்கி அடி எடுத்து வைத்த நிகழ்வாக - புதிய சமூகத்திற்கான ஒரு நுழைவு வாயிலாக, ரஷ்யப் புரட்சி விளங்குகிறது. அது தோற்கடிக்கப்பட்டு இருக்கலாம். சரித்திரத்தில் புதுமையான பல முயற்சிகள் வீழ்ச்சியடைந்த வரலாறுகள் ஏராளமாக உள்ளன. அறிவியலில் புதிய பரிசோதனைகள் துவக்கத்தில் தோல்வியடைந்தாலும் பின்னர் அவற்றின் பாடங்களை உணர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருப்பதை உலகம் அறியும்.  இதற்கு பல எடுத்துக்காட்டுகள் அறிவியல் வரலாற்றில் உண்டு. 

ரஷ்யப் புரட்சி உழைக்கும் மக்களின் இரண்டாவது பெருமுயற்சி. 1871 பாரிஸில் தொழிலாளி வர்க்கம் முதல் புரட்சிகர முயற்சியை நடத்தியது; 72 நாட்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. ஆனால் ஆளும் வர்க்கங்களால் அந்த அரசு கொடூரமாக வீழ்த்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக பாரிஸ் புரட்சியின் படிப்பினைகளை உள்வாங்கி லெனின் தலைமையில் ரஷ்யப் புரட்சி நடந்தது.  தோல்வியடைந்த புரட்சிகள் மிகச் சிறந்த படிப்பினை களை கம்யூனிஸ்டுகளுக்கு வழங்கிக் கொண்டே இருக்கும். ஆனால் புதிய சூழல், புதிய நிலைமைகள், அனைத்தையும் உள்வாங்கி அதற்கேற்ற நடைமுறை வியூகங்களை பாட்டாளி வர்க்க இயக்கம் அமைத்துக்கொள்ள வேண்டும். இது ரஷ்யப் புரட்சியும் வரலாறு முழுவதும் நடந்த வர்க்கப் போராட்டங்களும் இன்று நமக்கு கற்றுத்தரும் பாடம். 

நவீன தாராளமய காலம்

ரஷ்யப் புரட்சியின் போது இயங்கிவந்த முதலாளித்துவம் பல மாறுதல்களை இன்று பெற்றுள்ளது. புதிய கூறுக ளோடு உலகைச் சுரண்டி வருகிறது. இந்தப் புதிய அம்சங்க ளை புரட்சிகர இயக்கங்கள் உள்வாங்க வேண்டும். குறிப்பாக 1990களில் ஏற்பட்ட நவீன தாராளமய காலம் முக்கியமானது. அதேபோன்று பாட்டாளிவர்க்க இயக்கமும் கடந்த நூற்றாண்டின் செயல்முறைகளில் புதிய சூழலுக்கு ஏற்ப வியூகங்களை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த இரண்டு தேவைகளுக்கும் மார்க்சிய - லெனினியம் வழிகாட்டுகிறது. லெனினியச் சிந்தனைகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலானதாக இருக்கலாம். கடந்த நூற்றாண்டில் லெனின் எழுத்துக்களில் பல தகவல்கள், பல விவரங்கள் காலாவதியாகி இருக்கலாம். ஆனால் அடிப்படை புரட்சிகரக் கோட்பாடுகள் என்றைக்கும் அவசிய மானவை. அவற்றைப் பின்பற்றி புரட்சிகர இயக்கம் பயிற்சி  பெற வேண்டியுள்ளது. புதிய முயற்சிகளும், புதிய படிப்பி னைகளும், லெனினியக் கோட்பாடுகளைப் பின்பற்றி முன் கொண்டு செல்லப்பட வேண்டியுள்ளது.

புரட்சியால் நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய சமூகமாக சோவியத் சமூகம் விளங்கியது. சோவியத் மக்களின் அயராத உழைப்பால் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீத வளர்ச்சியை சாதிக்க முடிந்தது. இன்றைக்கும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் கூட அந்தச் சாதனை உயரத்தை எட்ட முடியவில்லை.

முதலாளித்துவம்: அன்றும் இன்றும்

லெனின் முதலாளித்துவத்தின் ஒரு வளர்ச்சி நிலையாக ஏகாதிபத்தியம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்.கடந்த நூற்றாண்டில் அதன் தன்மைகள் குறித்து விரிவாக அவர் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியில் அவர் வந்தடைந்த ஒரு முடிவு, ரஷ்யாவில் புரட்சியை முன்னெடுக்க வழிகாட்டி யது. உலகம் முழுவதும் பரவியுள்ள  ஏகாதிபத்தியத்தின் சங்கிலியின் கண்ணி, ரஷ்யாவில்  பலவீனமாக உள்ளதை லெனின் கண்டறிந்தார். இந்நிலையில் பாட்டாளி வர்க்கம் அதன் மீது தாக்குதல் நடத்தி ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து ரஷ்யாவை விடுவிக்க முடியும் என்று லெனின் மிகத் துல்லியமான முடிவுக்கு வந்தார். இந்தச் சிந்தனையில் விளைபொருளாக ரஷ்ய சோசலிசம் மலர்ந்தது. இதுபோன்ற லெனினியப் பகுப்பாய்வு இன்றைய ஏகாதிபத்தியம் குறித்தும் தேவைப்படுகிறது.

“தற்கால ஏகாதிபத்தியம் குறித்த சிந்தனைகள்”எனும் தலைப்பில், பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஏகாதிபத்தியத்தின் சமகால கட்டத்தை சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்க மாக விவரிக்கின்றார்.இது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி யின் நிதி மூலதனத்திலிருந்து வேறுபட்டது எனவும் பிரபாத் விளக்குகிறார்.

நிதி மூலதனத்திற்கு கட்டுப்பாடற்ற செயல்பாட்டு அரங்கம் தேவைப்படுகிறது, இதனால் உலகளவில் இடைக்காலமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டியை மட்டுப்படச் செய்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நாட்டின் அரசும் நிதி மூலதனத்தின் உலகளாவிய தேவைகளுக்கு அடிபணியும் அரசாகவே செயல்படுகிறது. எனினும், அரசு பழைய அடிமைத்தனம் நிறைந்த  காலனி அரசாக இருப்ப தில்லை. மாறாக ஒரு தேசிய அரசாகவே உள்நாட்டு நிர்வா கத்தையும் வெளிநாட்டு விவகாரங்களையும் நிர்வகித்து வருகிறது.

புதிய சூழலின் முக்கிய முரண்பாடு

நிதி மூலதனத்தின் இந்த மேலாதிக்கம் புதிய சூழலில் முதலாளித்துவ  வர்க்கத்திற்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் முரண்பாடுகளைத் தூண்டியுள்ளது;  மொத்த உலக உற்பத்தியில் ஊதியத்தின் பங்கை முதலாளித்துவம் குறைத்து வருவதுதான், மிக முக்கியமான முரண்பாடாகும். புதிய தாராள மயம் உலக வருமான விநியோகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளது. மக்களின் வாங்கும் சக்தியை கடு மையாக குறைத்து வருகிறது. மற்றொருபுறம், அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி, மக்கள் நலத்திட்டங்கள் வெட்டப்படுகின்றன.

இந்த நெருக்கடி வளர்ந்த நாடுகளில் வேலை யின்மையை தீவிரப்படுத்துகிறது. மூன்றாம் உலக நாடு களில் வேலையின்மையோடு சேர்ந்து, கார்ப்பரேட் மூலதனத் தேவைகளுக்காக விவசாயம் அழிக்கப்படுகிறது. கிராமப்புற உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படு கின்றன.

இந்த நிலைமைகளின் அடிப்படையில்தான் செயல்படுவ தற்கான புரட்சிகர இயக்கம் உருவாக்க வேண்டியுள்ளது.

முதலாளித்துவம் பற்றிய மார்க்சிய - லெனினியக் கோட்பாடுகள் இன்றளவும் பொருத்தமானவை என்பதை தற்போதைய நிலைமைகளும் எடுத்துக்காட்டுகின்றன.

செயலுக்கான வியூகங்கள் 

அன்றைய ரஷ்யச் சூழலில் தொழிலாளி - விவசாயி வர்க்கக் கூட்டணியை புரட்சிக்கு தலைமை தாங்கிடும் கூட்டணி யாக லெனினும், போல்ஷ்விக் கட்சியும் முன்வைத்தனர். இது புரட்சியின் வெற்றிக்கு வித்திட்டது. இந்தியாவிலும் இந்த வர்க்கக் கூட்டணியே உழைக்கும் மக்களின் அதிகாரம் அமைந்திட வழிவகுக்கும்.இதற்கான வர்க்க உணர்வினை வலுப்படுத்த புரட்சிகரமான கட்சி அவசியம் என்பதை ரஷ்யப் புரட்சி வழிகாட்டுகிறது.

லெனின் எழுதினார்:

“வலுமிக்க, ஊசலாட்டம் இல்லாத,நிலையான கட்சியே உழைக்கும் மக்களிடம் விரிந்த செல்வாக்கைப் பெற்றிடும்..” கட்சியை கட்டுவதற்கான  படிப்பினைகளை ரஷ்யப் புரட்சி கற்றுத் தருகிறது.இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் புரட்சி கரக் கட்சி அமைப்பினை உழைக்கும் மக்களின் தலை மையாக உயர்த்துவது அவசியம்.

ரஷ்ய புரட்சியின் பயணம் முடியவில்லை; மாறாக அந்த சோசலிசப் பயணம் தொடருகிறது; அது வெற்றியையும் ஈட்டும்.

கட்டுரையாளர் : மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)





 

;