மக்கள் அனைவரையும் உள்ளடக்கி இருப்பது, அவர்களுக்கான அதிகாரம் அளிப்பது போன்றவற்றை வலதுசாரி அரசியலின் இயல்பு அனுமதிக்குமா என்பது ஓர் ஆழமான கேள்வி. மக்களுக்கான அதிகாரத்தை மறுப்பதுதான் குறுகிய போலியான தேசப்பற்றிற்கான முன்நிபந்தனையாக இருக்கும் போது, மக்களுடைய எதிர்பார்ப்புகளுடன் பெரும்பான்மை ஒருங்கிணைப்பை இணைக்கின்ற விதத்தில் புதுவகையான நிலைமை இருக்க முடியுமா?
அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கும் 2019 மக்களவைத் தேர்தல்களில் நரேந்திர மோடி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். இந்த தேர்தல் முடிவுகள் கலாச்சார தேசியவாதம், பழமை வாத வலதுசாரி அரசியல் ஆகியவை உலகளாவிய அளவில் எழுச்சி பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள் ளன. பிரேசிலில் நீண்ட காலத்திற்கு முன்னர், முறையான நிறுவன அமைப்பின் ஆதரவு எதுவுமின்றி, முற்றிலும் புதி தாக அரசியலுக்குள் நுழைந்து இதே போன்ற வெற்றியைப் பெற்ற ஜெயர் போல்சொனாரோ என்பவரோடு ஒப்பிடு கையில், மோடியோ பாஜக, ஆர்எஸ்எஸ் என்று நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன கட்டமைப்பின் ஆதரவை முழுமையாகப் பெற்றவராக இருக்கிறார்.
உளவியல் போரின் மூலம்...
பிற அரசியல் கட்சிகளும், இடது-தாராளவாத அறிவுஜீவிகளும் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்க ளுக்காக சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டணியோ இந்த பாதிக்கப்பட்ட மக்களைப் போன்றே சிந்திப்பதாக இருக்கின்றது. அதாவது கலாச்சார ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களின் தளத்தில் நிற்பவர்களாக இவர்கள் இருப்பதால், அந்த மக்களின் கவலை, பயம், மரியாதை, பெருமை, அவமானம் போன்றவை எவ்வாறு வேலை செய்யும் என்பதை நெருக்கமாகப் புரிந்து கொண்ட வர்களாக இருக்கிறார்கள். இந்த தேர்தல் வெற்றி என்பது வெறுமனே அமைப்புரீதியான ஒழுங்கமைப்பு, தேர்தல் கணக் கீடுகள் ஆகியவை குறித்ததாக மட்டுமே இருக்கவில்லை. அரசி யல் வெற்றி என்பதைவிட தார்மீக வெற்றியாக இருக்கின்ற இந்த வெற்றி சமூக மாற்றத்தால் பெறப்பட்டதாக இல்லாமல் உளவியல் போரின் மூலம் பெறப்பட்ட வெற்றியாகவே இருக்கிறது. சமூகத்திற்கான கொள்கைகளுக்கும், தேர்தலுக்கான தேர்வுகளுக்கிடையேயும் இருக்கின்ற மிகமெல்லிய தொடர்பைக் கண்டு கொண்ட பாஜகவால், பயனாளிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்றவாறு பேசி, சமூ கத்திற்கான கொள்கைகளைக் கைவிடவும் முடிந்திருக்கி றது. எடுத்துக்காட்டாக, வெறுமனே எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான திட்டமாக இல்லாமல், மரபுவழியாக வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்ற பெண்களின் பங்கை மேம்படுத்துவது, வலுவூட்டுவது என்பதாக அவர்களுடைய உஜ்வாலா திட்டம் இருந்தது. கழிவு மற்றும் மாசுபடுத்தலுடன் தொடர்புடைய சமூக அவமானங்களில் இருந்து விலகிச் செல்வதையே கழிப்பறைகள் குறித்து அரசாங்கம் கட்ட மைத்த புதிய கொள்கைகள் பெரிதுபடுத்தின. அவர்களால் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை மாற்றியமைக்கா மலேயே சாதி குறித்து உரையாற்ற முடிந்தது. கருப்புப் பணத்தில் உழன்ற, ஊழல் நிறைந்த உயர்தட்டு மக்களுக்கு எதிராக இருந்து வந்த எழுச்சியை இலக்காகக் கொண்டதாக இருந்த பணமதிப்பு நீக்க அறிவிப்பு உண்மை யில் செல்வந்தர்களின் நலன்களுக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் பணம் எதுவும் வங்கிக் கணக்கிற்குள் செலுத்தப்படவில்லை என்றா லும், வங்கி கணக்குகளைத் துவக்கிக் கொடுத்ததன் மூலம் நேரடிப் பண பரிவர்த்தனைகள் மூலமாக முறையான, பணம் சார்ந்த நவீனப் பொருளாதாரத்துடன் நாமும் இணைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்திக் கொடுத்தது.
உண்மையில் ஏதும் செய்யாமலேயே உணர்வை ஏற்படுத்துகிற முறை
விமானத் தாக்குதல்கள் குறித்த தேர்தல் பிரச்சாரம் நாட்டின் மீது கட்சிக்கு அக்கறை இருப்பதாக உறுதிப்படுத்தி யது. உடைமைகளைப் பறித்தலைத் தடுப்பது, மோசமான வாழ்க்கை நிலைமைகளை சீர்திருத்துவது என்று எந்த நட வடிக்கைகளையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்திராத பாஜகவால், தங்களுடைய உடைமைகளை இழந்தவர்களி டம், துயரங்களிலிருந்து விடுதலை பெறுகின்ற உணர்வை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது. மதம், குடும்பம் சார்ந்த நெறிமுறைகளை பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணி மிக எளி தாகப் புரிந்து கொண்டிருப்பதாலேயே இவை சாத்தியமாகி இருக்கின்றன. தேசம், கட்சி, தலைவர் என்று அனைத்தை யும் ‘வீட்டோடு’ எளிதில் தொடர்புபடுத்துவதற்கு அவர்களால் முடிந்திருக்கிறது. உலகின் பார்வையில் இந்தியா குறித்த ‘புதிய’ மற்றும் ‘மேம்பட்ட’ சித்திரம் என்பது எதைக் குறிக்கிறது என்பதை விளக்காமலேயே அல்லது அதற்கான எந்த முயற்சியை யும் எடுக்காமலேயே, அவ்வாறான சித்திரம் இருப்பதாக மக்களிடம் சொல்லப்பட்டது. இந்தப் பெருமையைக் கேள்விக்குள்ளாக்குபவர்களை, விமர்சனம் செய்பவர்களை போட்டிகள் நிறைந்த உலகில் நமது பலவீனங்களை அம்ப லப்படுத்துபவர்களாக பொதுமக்கள் பார்வையில் அவர்க ளால் காட்ட முடிந்தது.
நிறைவேற்றமாட்டார் என தெரிந்தும்...
கொள்கைகளும், அரசியல் நிகழ்வுகளும் நம்பிக்கை மற்றும் நடைமுறைவாதத்திற்கு இடையில் ஊடாடிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முன்வைத்த முழக்கங்கள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டன. இந்திய மக்களிடம் அதிகரித்து வருகின்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்து கின்ற விதத்தில் ‘அச்சே தின்’, ‘புதிய இந்தியா’ என்பதாக தங்க ளுடைய முழக்கங்களை முன்வைத்த பாரதிய ஜனதா கட்சியினர், பல்வேறு தடைகளுக்கிடையே காரியங்களைச் செய்து முடிக்க நினைப்பதாக பின்னர் ‘சஃப் நியாத், சஹி விகாஸ்’ (நேர்மையான நோக்கம், நேர்த்தியான வளர்ச்சி) என்று அந்த முழக்கங்களை மாற்றியமைத்துக் கொண்டனர். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மக்களு டைய எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்பதாக ‘மோடி ஹாய் தோ மும்கின் ஹாய்’ (மோடியால் எதுவும் சாத்தியப் படும்) என்று கடைசியாக தங்களுடைய முழக்கத்தை அவர்கள் மாற்றிக் கொண்டனர். தங்களுடைய எதிர்பார்ப்புகளை மோடி நிறைவேற்ற மாட்டார் என்பதை மக்கள் அறிந்திருந்தாலும் கூட மோடிக்கு மாற்றாக யாரும் இல்லை என்ற கருத்தை முன்வைக்கும் வகையில் ‘ஆயஹே தோ மோடி ஹாய்’ (மோடி மட்டுமே வென்று வருவார்) என்ற முழக்கத்துடன் அவர்களுடைய தேர்தல் பிரச்சாரம் முடிவிற்கு வந்தது. மோடியின் வெற்றி முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டு விட்டதால், அவரைத் தவிர்த்து வேறு யாருக்கும் செலுத்துகின்ற வாக்குகள் வீணாகிப் போய் விடும் என்பதாக மற்றொரு விளக்கமும் அவர்களால் முன்வைக்கப்பட்டது.
வேலை வாய்ப்புகள், விவசாயத்துறையின் நெருக்க டிகள் போன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சியினர் எதிரொ லித்தது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த பிரச்ச னைகள் அனைத்தும் பாஜக ஆட்சியில் இருக்கின்ற மாநி லங்களுக்கு மட்டுமானதாக இருக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நியாய் திட்டத்தை கடைசி நிமிடத்திலேயே அறிவித்தது. அப்போது அந்தக் கட்சியின் மீது மக்களிடம் நம்பகத் தன்மை உருவாகி இருக்கவில்லை என்பதால், அந்த திட்டத்தை தங்களால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக் கையை மக்கள் மத்தியில் அவர்களால் உருவாக்க முடிய வில்லை. அந்த அறிவிப்பு வெளி வந்த நேரத்தில், ஏற்கனவே மோடிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க மக்கள் முடிவு செய்து விட்டிருந்தனர். டிசம்பரில் வென்றெடுத்த மாநிலங்களில் இன்னும் அதிக மாக மக்களால் பாராட்டப்படுகின்ற செயல்களை காங்கிரஸ் கட்சி செய்து முடித்திருந்தால், அவர்களுடைய இந்த திட்டத்தை மக்கள் இன்னும் தீவிரமாக தங்களுடைய கவ னத்தில் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த மாநிலங்களில் அவ்வாறு எதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்பதால் மக்களும் அந்த திட்டத்தை கவனிக்காமல் விட்டு விட்டனர்.
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வாய்ப்புகள் இல்லாதபோதும்...
நரேந்திர மோடியின் கடந்த காலத்தைப் பார்த்தோமே யானால், அவர் இன்னும் மக்களிடம் எதிர்பார்ப்புகளை அதி கரிக்கவே செய்வார் என்பது தெளிவாகத் தெரியும். முதன் முறை நடந்த தேர்தலில் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றப் போவதாகவும், இரண்டாவது முறை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றப் போவதாகவும் அவர் அறி வித்திருந்தார். எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற சூழ்நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை நிறை வேற்றுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாத போது இவ்வாறு உளவியல் ரீதியாக மக்களைச் சரிக்கட்டுவது மட்டுமே அவர்க ளுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களை ஈடுகட்டக் கூடும். எனினும், இவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை சிறிதும் நிறைவேற்றாமல் மோடியால் கடைப்பிடிக்கப்படும் இந்த தந்திரம் நீடித்து நிற்கும் என்கிற எதிர்பார்ப்பு மிகுந்த சவாலானதாகவே இருக்கும். தரவுகளை எல்லாம் மறைத்து, எந்தவொரு தொடர்ச்சியான விவாதத்தையும் அனுமதிக்கா ததன் விளைவாக வேலையின்மை, விவசாய நெருக்கடி, விவசாயிகளின் துயரங்கள் போன்ற பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாமலேயே மோடியின் முதலாவது ஆட்சி முடிவிற்கு வந்தது.
இந்த இடைவெளியானது விரிசல்களை நிச்சயம் வெளிப் படுத்திக் காட்டும். உண்மையில் இது பெரும் சவாலாகவே இருக்கும். கொள்கைகளையும், நிறுவனங்களையும் எந்த வழிகாட்டுதலுமின்றி நிர்வகிக்க வேண்டிய அவசியத் தால், தலைவர் ஒருவரை மட்டுமே அவர்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. எனவே அந்த தலைவர் மீது வைக்கப்படு கின்ற நம்பகத்தன்மை பன்மடங்கு உயர்கிறது. ஆனாலும் இரண்டாவது முறையாக இதுபோன்ற தந்திரம் மீண்டும் வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்குரியதே. மக்கள் அனைவரையும் உள்ளடக்கி இருப்பது, அவர்க ளுக்கான அதிகாரம் அளிப்பது போன்றவற்றை வலதுசாரி அரசியலின் இயல்பு அனுமதிக்குமா என்பது ஓர் ஆழமான கேள்வி. மக்களுக்கான அதிகாரத்தை மறுப்பதுதான் குறுகிய போலியான தேசப்பற்றிற்கான முன்நிபந்தனை யாக இருக்கும் போது, மக்களுடைய எதிர்பார்ப்புகளுடன் பெரும்ம்பான்மை ஒருங்கிணைப்பை இணைக்கின்ற விதத்தில் புதுவகையான நிலைமை இருக்க முடியுமா?
கட்டுரையாளர் : ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அரசியல் ஆய்வு மைய இணைப் பேராசிரியர் ‘மோடிக்குப் பின் இந்தியா’ நூலாசிரியர் நன்றி : தி வயர் இணைய இதழ்
தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு