நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தின் தார்சுலா மாவட்டம் மகேந்திர நகருக்கு வியாழனன்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் கோத்பே என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.