tamilnadu

img

இத்தாலியில் 10 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

ரோம், மார்ச் 5- கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இத்தாலியில் அனைத்து பள்ளிகளுக்கும் பத்து நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டுகளும், ஏன் கால்பந்து கூட உள்விளையாட்டு அரங்கத்தில் மட்டுமே விளையாட வேண்டுமெனவும்  இத்தாலி அறிவுறுத்தி உள்ளது. இத்தாலியில் மட்டும் 107 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலேயே கொரோனா வுக்கு அதிகமானோர் பலியாகியிருப்பது இத்தாலியில்தான். இத்தாலியின் வடக்கு பகுதியில் மட்டும் 3000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.