போனஸ் கேட்டு நெல்லை வண்ணார்பேட்டை பணிமனைமுன்பு அனைத்து போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தஸ்தகீர் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி, பாலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.