tamilnadu

img

அடிப்படை வசதிகள் கோரி மலைவாழ் மக்கள் மனு

உதகை, ஆக.27- சேரம்பாடி அருகே வசிக்கும் மலை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் அடிப் படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதுதொடர்பாக சேரம்பாடி அருகே வசிக்கும் மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்த மனுவில் கூறி யுள்ளதாவது, நீலகிரி மாவட்டம், பந்த லூர் வட்டம் சேரம்பாடி குழிவயல் அருகிலுள்ள சன்னன் காலனியில் பல தலைமுறைகளாக வசித்து வருகி றோம். இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பங்கள் உள் ளது. எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு உள் ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகிறோம். குறிப்பாக, இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நட மாட்டம் அதிகம் உள்ளது. மேலும் சாலை வசதி மற்றும் தெருவிளக்கு இல் லாததால் இரவு நேரத்தில் யாருக் காவது திடீரென உடல்நலம் பாதித் தால் கூட உடனடியாக மருத்துவம னைக்கு அழைத்துச் செல்ல முடியாத தால் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற் படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித் தும் பலனில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் ஏற்ப டுத்தித் தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;