tamilnadu

img

நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல்

உதகை, ஜூலை 10 -  நீலகிரியில் அரசு மருத் துவக் கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங் களில் புதிதாக  அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத்தொ டர்ந்து, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், நாகை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கள் கட்டுவதற்கான பணிகள் தொடங் கின. இந்நிலையில், நீலகிரி மாவட்டத் தில்  மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு உதகையில் உள்ள எச்பிஎப் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதைய டுத்து, மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவிகித நிதியும், தமிழக அரசின் பங்களிப்பாக 40 சதவிகிதம் நிதியும் கொண்டு மருத்துவக் கல்லூரி அமைக் கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற் றது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழ னிச்சாமி, சென்னை தலைமை செயல கத்தில் இருந்தவாறே காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உதகையில் மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில், ரூ.447 கோடி மதிப்பீட் டில் கட்டப்படும் இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

;