உதகை, பிப். 22- குன்னூர் பேருந்து நிலையம் அருகே அமைக் கப்பட்டுள்ள உயர் மின் விளக்கானது காட்சிப் பொருளாக காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகில் உயர் கோபுரத்தில் ஐமாஸ் லைட் அமைக் கப்பட்டு உள்ளது. கடந்த பல மாதங்களாக இந்த ஐமாஸ் லைட் ஒளிராமல் உள்ளதால் இரவு நேரங்க ளில் இந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக் கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரி டம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகவே, சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக போர்க்கால அடிப்படை யில் ஐமாஸ் லைட் ஒளிர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.