உதகை, செப்.18- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செப் டம்பர் மாதம் இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு மலர் தொட்டிகளை மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் இரண் டாம் பருவத்தினை முன்னிட்டு மலர் தொட்டிகளை மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணி யினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து கூறியதாவது, நீலகிரி மாவட் டம், சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக அரசு தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் காட்சியை காண வருடந்தோறும் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் இரண்டாம் பருவத்திற்கான 85 வகையான மலர்ச்செடிகளான டேலியா, சால்வியா, இன்கா மேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், அஜிரேட்டம், ரனன் குலஸ், சைக்ளமன், அந்தூரியம், ஆர்கிட், டியுப்ரஸ பிகோனியா, பிலோனியா, ஜெரேனியம், கேலஞ்சோ ஆகியவை அடங்கிய 15,000 மலர்தொட்டிகள் மலர்காட்சி திடலில் அடுக்கப்படவுள்ளது. இம் மலர்க்காட்சி திடல் சுற்றுலா பயணிகளுக்காக இன்று முதல் ஒரு மாத காலம் திறந்து வைக்கப்படவுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் சுற்றுலா தலங் களை கண்டுகளித்து செல்லளாம். மேலும் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பய ணிகள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மீராபாய், உதவி இயக்குநர் தோட்டக்கலைத்துறை ராதாகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.