tamilnadu

img

உலகளவில் கொரோனா பாதிப்பு 25 லட்சமாக உயர்வு....   

நியூயார்க் 
210-க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தினமும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதா? கொரோனா பாதித்த நோயாளிகளைக் கவனிப்பதா? இல்லை கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிப்பதா? கொரோனா ஊரடங்கில் தவிக்கும் மக்களைக் கவனிப்பதா? என பல்வேறு சிக்கலில் உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், கொரோனா தொற்று கட்டுப்பாடு இல்லாமல் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் காவு வாங்கி வருகிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் பலியாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 430 பேர் பலியாகியுள்ளனர். ஆறுதல் செய்தியாக 6 லட்சத்து 58 ஆயிரம் பேர்  கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஸ்பெயின், ஈரான், பெல்ஜியம், ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமடைந்துள்ளது.    
 

;