tamilnadu

img

இலங்கையில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, நவ.16- இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக் கான வாக்குப்பதிவு நவம்பர் 16 சனிக்கிழ மையன்று நடைபெற்றது. இதில்  81.52 சத வீத வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் வாக்குப் பதிவு மிகவும் அமைதியாக நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் காலை வேளை யில் சிறிதளவு மழை பெய்த போதும், மக்கள் தொடர்ந்து வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 35 பேர் போட்டியிட்டனர். ஆனால் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 12 ஆயி ரத்து 845 வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வாக்களித்தனர். சனிக்கிழமை யன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. 35 பேர் போட்டியிட்டதால் 26 அங்குலத்துக்கு வாக்குச் சீட்டுகள் தயா ரிக்கப்பட்டன. 

துப்பாக்கிச்சூடு

இலங்கையின் கடற்கரை நகரமான புத்தளம் பகுதியில் இருந்து முஸ்லிம் வாக்காளர்கள்,  வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள மன்னார் பகுதிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. பின்னர் வாக்காளர்களை குறிவைத்து 17 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரி வித்தன. வாக்குப்பதிவின்போது 69 இடங்க ளில் வன்முறை நிகழ்ந்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சனிக்கிழமையன்று இரவு துவங்கும் வாக்கு எண்ணிக்கையின் முழு முடிவு கள் திங்கள்கிழமை காலைதான் வெளி யாகும்.
 

;