தென் ஆப்பிரிக்காவில் கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரின் எல்டோரடோ பார்க் அருகே தேசிய நெடுஞ்சாலையில், கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் பலத்த காயமங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.