tamilnadu

img

தோழர் என்.வரதராஜனுக்கு நினைவஞ்சலி

திண்டுக்கல், ஏப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தலைவர் தோழர் என்.வரதராஜனுக்கு அவரது நினைவு நாளையொட்டி (ஏப்ரல் 10) வெள்ளியன்று  கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், நகர்க்குழு உறுப்பினர் அரபு முகமது, மூத்த தோழர் ஆர்.மணி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

என்.வி. நினைவிடத்தில்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குஜிலியம்பாறை ஒன்றியக்குழு சார்பாக பாளையம் அருகே உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் ராஜரத்தினம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்டச் செயலாளர் வ. கல்யாணசுந்தரம் மற்றும் தோழர் என்.வி. குடும்பத்தினர் பங்கேற்றனர்.


 

;