tamilnadu

நாமக்கல்: மாநில அரசின் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சியர் தகவல்

நாமக்கல், ஆக. 24- தேசியப் பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருது – 2020 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ள தால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கா.மெகாராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த செய்திக்குறிப்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமி ழகத்தில் வசிக்கும் பெண் குழந்தைகள் (31 டிசம்பர் -ன் படி),  பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந் தைத் தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தைத் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப் பான தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்க ளுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகிய வற்றிற்குத் தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற் படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ப தைப் போன்ற செயல்களைப் பெண்களாலும் சாதிக்க முடி யும் என்று சாதித்திருத்தல் போன்ற செயல்களைப் புரிந் தோர் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம். சாதனை புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தை களின் பெயரினை நவம்பர் 15 –க்குள் நாமக்கல் மாவட்டத் தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள் ளார்.

;