வண்டல் மண் விற்பனை செய்வதை தடுக்க போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
நாமக்கல், ஜூலை 13- முறைகேடாக வண்டல் மண் விற்பனை செய்வதை தடுக்கக்கோரி போராடிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம் அக்ரஹாரம் ஊராட்சி எளையாம்பாளையத்தில் சர்வே எண் 104 சுமார் 50 ஏக்கர் நிலம் அளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் முதலமைச்சர் குடிமராமத்து பணியின் மூலம் ஏரி வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதனை முறையாக விவசாயிகளுக்கு வழங் காமல், பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு இடைத்தரகர் களுக்கும், காண்ட்ராக்ட் காரர்களுக்கும் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்க வேண்டும் என வலி யுறுத்தி குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் வாலிபர் சங்கத் தலைவர்களை குமாரபாளையம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என அந்த அறிக்கையில் அவர் கூறிப்பிட்டுள்ளார்.
தருமபுரி புத்தகத்திருவிழாவை முன்னிட்டு நாளை சிறப்பு வாசிப்பு இயக்கம்
தருமபுரி, ஜூலை 13- தருமபுரியில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4 ஆம் தேதி வரை இரண்டாம் ஆண்டு புத்தகத்திருவிழா நடைபெறவுள்ளது. தகடூர் புத்தகப்பேரவையும், பாரதி புத்தகாலயமும் இணைந்து நடத்தும் இவ்விழாவையொட்டி மாண வர்களுக்கான போட்டிகள், நூல்கள் வெளியீடு, இலக் கியச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் என பல் வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதி யாக ஜூலை 15 ஆம் தேதியன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தன்று பள்ளிக்கல்வித்துறையும், உயர் கல்வித்துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதிலு முள்ள பள்ளி, கல்லூரிகளிலும் அன்று காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை “தருமபுரி வாசிக்கிறது “ என்ற சிறப்பு வாசிப்பு இயக்கம் நடைபெறவுள்ளது. மாணவர்கடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடைபெறவுள்ள இவ்வியக்கத்தை இலக் கியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முன் னிலை வகிக்கிறார். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரில்கல்வி இணை இயக்குனர் தொடங்கி வைக்கிறார். மாவட்டம் முழுவதிலுமுள்ள நூலகங்களிலிருந்து மாண வர்கள் வாசிப்பதற்கான நூல்கள் வழங்கப்படும். இந் நிகழ்வில் மாவட்டம் முழுவதுமுள்ள மாணவர்கள் அனை வரும் பங்கேற்க வேண்டும் எனவும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், தொழிலா ளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆங்காங்கு வாசிப்பில் ஈடுபட வேண்டும் என பாரதிபுத்தகாலயமும், தகடூர்புத்தகபேரவையும் கேட்டுக்கொண்டுள்ளது.