நாமக்கல். அக்.4- நாமக்கல் மாவட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்க சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கு.சிவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.மணிவேல், மாவட்ட செயலாளர் எஸ்.குழந்தான், நாமக்கல் நகர செயலாளர் தம்பிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோதப் போக் கினைக் கண்டித்து அக்.14 ஆம் தேதியன்று மாவட் டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பிரச் சாரக் கூட்டங்கள் நடத்துவது. ஆக.16 ஆம் தேதி யன்று நாமக்கல் பூங்கா சாலையில் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய் யப்பட்டது. மேலும், பள்ளிபாளையம், குமாரபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, எலச்சிபாளையம், ராசி புரம், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை, பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.