tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக நாமக்கல், ஈரோட்டில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன. 5- குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஈரோடு மற்றும் நாமக்கல்லில் ஞாயிறன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும். ராணுவம், பாதுகாப்பு, நிலக்கரி, ரயில்வே சுரங்க துறைகளில் வெளி நாட்டு நிறுவனங்களை அனு மதிக்கக் கூடாது. சிறு, குறு நடுத்தர  தொழில்களை பாதுகாக்க வேண்டும். முறைசாரா தொழி லாளர்கள் உட்பட அனைவருக்கும் ரூ.6ஆயிரம் குறைந்த பட்ச ஓய்வூ தியத்தை உறுதி செய்ய வேண்டும்  போன்ற பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நாமக்கல்லில் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தான் முன் னிலை வகித்தார். சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.மணிவேல், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி மற்றும் இடதுசாரி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
ஈரோடு
இதேபோல், ஈரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.டி. பிரபாகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் ப.மாரிமுத்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப் பினர் சி.என்.துளசிமணி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி  பேசினார்கள். இதில் ஏராளமா னோர் கலந்து கொண்டு முழக்கங் களை எழுப்பினர்.

;