tamilnadu

img

அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 28- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் அடிப்படை வசதிகளைச் செய்து  தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளி பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு முறையான கழிப்பிட வசதி இல்லை. இருப்பதும் முறையாக பரா மரிக்கப்படவில்லை. எனவே, தண் ணீர், கதவு உள்ளிட்ட வசதிகளுடன் கழிப்பிடம் பராமரிக்கப்பட வேண் டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பள்ளி வளா கத்தில் அத்துமீறி நுழையும் சமூக விரோதிகளை அடையாளம் காண சிசிடிவி கேமரா அமைப்பதோடு, நான்கு புறமும் சுற்று சுவர் உயரமாக அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம்அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் எம்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே.குமார், ஏ.அசன், எம்.கே.பிரபாகரன் மற்றும் வி.மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;