tamilnadu

img

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், சாதிய பாகுபாட்டை கண்டித்து தரையில் அமர்ந்து சிபிஎம் கவுன்சிலர் போராட்டம்

நாமக்கல், ஜூலை 24- எலச்சிபாளையம்.ஊராட்சி ஒன் றிய நிர்வாகம் நிதி ஒதுக்கீட்டில் எதிர் கட்சிகளுக்கு காட்டும் பாரபட்சம் மற் றும் சாதிய பாகுபாட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகேயுள்ள எலச்சிபாளை யம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற் றது. இந்த கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற்ற தாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறி வித்தார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 5 ஆவது வார்டு கவுன்சிலர் சு.சுரேஷ்  தலையிட்டு, பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டியுள்ளதால் ஒன்றிய கவுன்சிலர்கள் கருத்தைக் கேட்டு பின்னர் கூட்டத்தை முடியுங்கள் என்று கூறினார்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த ஆணையாளர் விஜயகுமார் கூட்டம் முடிந்ததாக அறிவித்து சென் றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன் சிலர் சு.சுரேஷ் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, ஆளும் அதிமுக அரசு மற்றும் ஒன்றிய நிர்வாகம் எதிர்க்கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் தராமல் நிதி ஒதுக்கீட் டில் பாரபட்சம் காட்டுகின்றது. அரசு நிகழ்ச்சிகளில் கூட சாதிய பாகுபாடு கள் காட்டப்படுகிறது. குறிப்பாக, வார் டுகளுக்கு உட்பட்ட பகுதியில் நடை பெறும் கட்டிடத் திறப்பு விழாக்களில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் பெயர்கள் அவசியம் பெயர் பல கையில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கவுன்சிலர்களுக்கு தெரியாமல் திட்டப்பணிகளை நேரடி யாக ஒன்றிய பெருந்தலைவர் தலை யிட்டு செய்வதை நிறுத்த வேண்டும். கடந்த 20 வருடமாக உடல்நிலை சரி யில்லாமல் வீட்டிலேயே உள்ளவரை மீண்டும் ஒப்பந்ததாரராக புதுப்பிக்கப் பட்டதை ரத்து செய்ய வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை பேச முயன்றோம்.

ஆனால், ஆளும் தரப்பி னர் அதற்கு அனுமதிக்க மறுத்து, கூட்டத்தை பாதியில் முடிந்ததாக அறி வித்தனர். இதனை கண்டித்து தற் போது போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். இப்போராட்டத்தால் கூட் டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

;