நாமக்கல், நவ.3 - நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர் களுக்கு வழங்கிவந்த போனஸ் குறை வாக வழங்கியதை கண்டித்து சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஞாயிறன்று பள்ளிபாளையத்தில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்கம் சிஐடியு சார்பில் 20 சதவிகித போனஸ் கேட்டு வந்தனர். ஆனால் விசைத் தறி உரிமையாளர்கள் சென்ற ஆண்டு 9.5 சதவிகிதம் போனஸ் வழங்கினர். இந்தாண்டு 9 சதவிகிதம் வழங்கி உள் ளனர். இதை கண்டித்து விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஏ.அசன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட தலைவர் கே.மோகன், துணைத் தலைவர் கே.குமார் மற்றும் திரளான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.