tamilnadu

img

புதன்சந்தையில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

நாமக்கல், மே18-நாமக்கல் அருகே புதன் சந்தையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து புதன்சந்தைக்கு மாடுகளை விலைக்கு வாங்கி செல்வதும், மற்ற மாவட்டங்களிலிருந்து புதன்சந்தைக்கு மாடுகளை விற்பனை செய்வது என நாமக்கல் மாவட்டத்தில் பிரசத்தி பெற்ற சந்தையாக உள்ளது. புதன்சந்தையில் பேருந்து நிறுத்தம் அருகில் வீடுகளில்இருந்தும், கடைகளில் இருந்தும் வெளியேறும் குப்பைகளை பிரதான சாலையில் கொட்டிவிட்டு அதனை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் உள்ள குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.