tamilnadu

மண் வளத்தை பரிசோதித்து விவசாயிகள் பயன்பெற வேளாண்துறையினர் அறிவுரை

நாமக்கல், மே 14-விவசாயிகள் மண் வளத்தை பரிசோதித்து பயன்பெறுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி வட்டார வேளாண் துறை உதவி இயக்குநர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பரமத்தி வட்டாரத்துக்குட்பட்ட விவசாயிகள் மண்ணின் தரத்தை பரிசோதித்து, அதற்கேற்ற தேவையான உரத்தை மட்டும் பயன்படுத்தினால் பயிர்கள் செழித்து வளரும். ஒவ்வொரு விவசாயியும் மண்ணில் உள்ள சத்துகளை அறிந்து அதற்கேற்ற உரங்களை பயன்படுத்தினால் செலவு குறையும். மேலும், தேவையற்ற உரங்களை மண்ணில் செலுத்தாமல் இருந்தால் மண் நஞ்சாவது தவிர்க்கப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களை பயன்படுத்தி மண் மாதிரி சேகரித்து, மண்வள அட்டைகளை பெற்று மண்ணின் வளத்துக்கேற்ப தேவையான உரத்தை மட்டும் பயன்படுத்தி, உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரித்து பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, திங்களன்று குன்னமலை கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் ராஜாமணி மண் மாதிரி சோதனை நிலைய வேளாண் அலுவலர் அன்புச்செல்வி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.