tamilnadu

img

தமிழகத்தை மீட்போம்; இந்தியாவைக் காப்போம்! நாகையில் தி.க. தலைவர் கி.வீரமணி முழக்கம்

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சி.பி.ஐ. வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்து, செவ்வாய்க் கிழமை இரவு, நாகப்பட்டினம் அவுரித்திடலில் திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமை வகித்தார். தி.க.மாவட்டச் செய லாளர் ஜெ.புபேஸ்குப்தா வர வேற்புரையாற்றினார். திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இலக்கிய அணி நிர்வாகிகள் இல.மேகநாதன், ம.குஞ்சுபாபு, மு.க.ஜீவா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தி.க. செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் முக.நாகை(தெற்கு) மாவட்டச் செயலாளர் என்.கெளதமன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.சிபிஎம் நாகை மாவட்டச் செய லாளர் நாகைமாலி, சி.பி.ஐ. நாகை மாவட்டச் செயலாளர் ஏ.சீனிவாசன், தி.க.பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தி.க. மாநில அமைப்

பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் மற்றும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டி னம் நாடளுமன்றத் தொகுதி சி.பி.ஐ. வேட்பாளர், அனைவரின் வாக்குகளைக் கேட்டு உரையாற்றி னார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, வேட்பாளர் எம்.செல்வராஜை ஆதரித்துச் சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில், “மோடி, ரெய்டு விட்டே மிரட்டிப் பணிய வைத்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். சமத்துவமும் சுயமரியாதையும் மிக்க தமிழர் மண்ணில் மதவெறி கொண்ட மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக இங்கே காலூன்ற முடியாது.மோடி மஸ்தான் சந்தையில் கீரியையும் பாம்பையும் வைத்துக் கொண்டு, இரண்டையும் சண்டைக்கு விடப் போவதாகக் கூறுவார். மக்கள் கூடியவுடன், யாரும் போய்விடக் கூடாது ரத்தம் கக்கு வீர்கள் எனப் பயமுறுத்தி, தனது போலியான தாயத்துகளை ரூ.100, 150- என விற்றுவிட்டு, மோடி மஸ்தான் அகன்று விடுவார். அந்த மோடி மஸ்தான்தான் இந்த மோடி. இப்படித்தான் அதிமுக தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். இது அம்மா அரசு இல்லை, வெறும் சும்மா அரசு. எனவே, தமிழகத்தை மீட்க வேண்டும்; இந்தியாவைக் காக்க வேண்டும், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்ல வேண்டும் எம்.செல்வராஜை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார். தி.க. நாகை நகரச் செயலாளர் தெ.செந்தில்குமார் நன்றி கூறினார்.

;