தரங்கம்பாடி அக்31- நாகை மாவட்டம், திருக்கடையூர் அரசு விதை பண்ணையில் குழிதட்டு முறை நெல் நாற்றாங்கால் அமைப்பது குறித்து ஆட்சியர் பிரவின் பி.நாயர் ஆய்வு மேற்கொண்டார். நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அரசு நெல் விதை பண்ணையில் ஆட்சியர், புதிய நெல் சாகுபடி முறைபற்றி கேட்டறிந் தார். பின்னர் புதிதாக குழித்தட்டு முறை நாற்று நடுமுறையை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து விதைப் பண்ணைக்கு சொந்த மான விவசாய நிலத்தில் பாய் நாற்றங்கால் முறை நடவு பணியை இயந்திரம் மூலம் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். பின்னர் புதிதாக ஜப்பானிலிருந்து விவ சாயத்திற்கு பயன்படும் வகையில் நெல் நாற்று நடுமுறையான குழித்தட்டு நெல்விதை முறையின் மூலம் ஒரு ஏக்க ருக்கு 3 அல்லது 4 கிலோ மட்டுமே பயன் படுத்தி நாற்றங்கால் அமைக்கலாம். மேலும் இந்த முறையின் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 4 அல்லது 5 டன் வரை மகசூல் பெற லாம். மேலும் இந்த நாற்றங்கால் மூலம் 16 நாளில் நாற்று நடவு பணியை இயந்திர மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் மேலும் ஏக்கருக்கு ரூ.5000 முதல் ரூ.6000 வரை மட்டுமே செலவாகும் என்றும் இதனை வரு கின்ற காலங்களில் விவசாயிகள் மேற்கண்ட முறையை பயன்படுத்தி விவசாயம் மேற் கொண்டால் நல்ல மகசூல் பெறலாம் என்று விவசாய பண்ணை மேலாளர் குமரன், ஆட்சியரிடம் கூறினார். இவர்களுடன் செம்பை வேளாண்மை உதவி இயக்குநர் தாமஸ், இணை இயக்குநர் பன்னீர்செல் வம், உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.