tamilnadu

img

தனக்கு ஓட்டுப் போடாத மக்களின் குடியிருப்பை இடிக்க முயற்சிக்கும் ஆளுங்கட்சி ஊராட்சித் தலைவர்

தரங்கம்பாடி, ஜூன் 25- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழமருதாந்த நல்லூரில் தனக்கு ஓட்டுப் போடாத மக்களின் வீடுகளை இடித்துத் தள்ள முயற்சிக்கும் அதிமுக ஊராட்சி தலைவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடை பெற்றது.  கீழமருதாந்த நல்லூர் ஊராட்சி யில் அனுமதியே இல்லாமல் குடி மராமத்து பணி செய்ய உள்ளதாக அப்பகுதியில் உள்ள குளத்துக்கரை யில் பட்டா நிலத்தில் 50 ஆண்டு களுக்கும் மேலாக  மக்கள் வசித்து வந்த 12 குடும்பங்களின் வீடுகளை தனக்கு ஓட்டு போடாத ஒரே கார ணத்திற்காக முன்வைத்து அதி முகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் சேகர் என்பவர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடிக்க முயற்சித்து வருகிறார். இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லா ததால் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சி ஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தலைவரை கைது செய்ய வலியு றுத்தியும், வீடு இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன், எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் து.கணேசன், மயிலாடு துறை வட்ட செயலாளர் சி.மேக நாதன், வட்டக்குழு உறுப்பினர்கள் த.ராயர், ஆர்.ரவீந்திரன், அ.அறிவழ கன், தே.துரைக்கண்ணு, கிளை செய லாளர் அ.ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

;