tamilnadu

img

தடை செய்த லாட்டரிச் சீட்டு காவல்துறை துணையுடன் விற்பனை

தரங்கம்பாடி, நவ.9- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல மாநிலங்களின் லாட்டரி சீட்டுகள் நாகை மாவட்டம், செம்பனார்கோவில் கடை வீதியில் கடந்த பல ஆண்டுகளாக காவல்துறையின் முழு ஆதர வோடு நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டு கின்றனர். செம்பனார்கோவில் மேலமுக்கூட்டிலுள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த பல ஆண்டுகளாக வெளிப்படையாகவே லாட்டரி சீட்டுகளை விற்று வருகின்றனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நிலையிலும் செம்பனார்கோவில் காவல்துறை யின் துணையுடன் சட்டவிரோதமாக எந்தவித தயக்கமுமின்றி விற்பனை செய்து வருகின்றனர். ஏற்கனவே டாஸ்மாக் கடை களால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் லாட்டரி விற்பனையால் மேலும் பாதிக்கப்படு வதாக வேதனையுடன் கூறுகின்றனர். செம்பனார்கோவிலில் ஒவ்வொரு முக்கூட்டிலும் நாள்தோ றும் வாகன சோதனை பணியில் ஈடுபடும் காவல்துறையினர், மேலமுக்கூட்டு மையப் பகுதியிலேயே வாடகைக்கு கடை எடுத்து பகிரங்கமாக லாட்டரி விற்பனை செய்யும் நபர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். சமூக ஆர்வலர்கள். சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீதும், விற்ப தற்கு அனுமதியளித்த வணிக வளாக உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.