சீர்காழி,மார்ச் 19- நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் பச்சைபெருமாநல்லூர் ஊராட்சி யில் உள்ள பொது குளங்கள், தென்னை மரங்களை பொதுமக்கள் முன்னிலையில் மார்ச் 19 வியாழக்கிழமையன்று காலை 11 மணியளவில் ஊராட்சி மன்றத் தலைவர் தனம் குணசேகரன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தின் சார்பில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.சுலோச்சனா, ஒன்றிய கவுன்சிலர் பி. காமராஜ், ஜி .சம்பத் , ஊராட்சி செயலர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.